• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தற்போது ஆளும் மத்திய மற்றும் மாநில அரசு மக்களுடைய குமரலாக இருக்கிறது- அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்.

BySeenu

Mar 29, 2024

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பாக கோவை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது மக்கள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
எடப்பாடி அவர்களும், நானும் இந்த கூட்டணி சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த கூட்டணி ஒரு வெற்றி கூட்டணி மக்கள் போற்றுகின்ற ஒரு கூட்டணியாக அனைவருமே ஆதரிக்கின்ற ஒரு கூட்டணியாக சிறந்த முறையில் உங்கள் முன்னாடி நான் வந்து இங்கே நிற்கிறேன். இன்றைக்கு நமது வெற்றி வேட்பாளராக ராமச்சந்திரனுக்கு நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திலே வாய்ப்பு கொடுத்து ஒரு அமோக வெற்றியை இந்த தேர்தலில் தர வேண்டும்.
தேமுதிக,அதிமுக எஸ் டி பி ஐ ,புதிய தமிழகம் கட்சி,கூட்டணி ஒரு மாபெரும் வெற்றி கூட்டணி, இந்த முறை நாம் அமைத்திருக்கிறோம் இந்த வெற்றி கூட்டணி நாளை நமதே நாற்பதும் நமதே என்று என்னுடைய முதல் உரையிலேயே இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.புரட்சித்தலைவர் அவர்களுடைய பெயரையே தன் பெயராக கொண்டுள்ளார்.அவரைப் போலவே ஒரு மாபெரும் வெற்றியை இரட்டை இலை சின்னத்திற்கு பெற்றுத்தந்து இந்த கோவை பாராளுமன்ற தொகுதி இரட்டை இலையின் வெற்றி கனி என்பதை புரட்சித் தலைவர் பாதத்தில் இந்த வெற்றிக்கனியை நாம் சமர்ப்பிப்போம்.வேட்பாளர் ராமச்சந்திரனின் தந்தையுமே இங்கு வந்து எல்லாருக்கும் தெரியும். 1991ல் இருந்து 95 வரைக்கும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் அவர் தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து இங்கு இருக்கின்ற பல திட்டங்களை நிறைவேற்றியவர். அவர் சிறுவாணி குடிதண்ணீர் திட்டத்தை மக்களுக்காக கொண்டு வந்தவர் அவர்.இன்றைக்கு அவரது மகன் தலைவருடைய பெயர் தன் பெயராக கொண்டு படித்த இளைஞர் அறிவாளி மக்களால் போற்றப்படும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நல்ல வேட்பாளர் ராமச்சந்திரன். மாநில அளவிலே ஐடி பிரிவு செயலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கேட்டுக்குறேன கோயம்புத்தூர் நம்பர் ஒன் மாநகராட்சி,அதுல எந்த மாற்றுக் கருத்துமே கிடையாது அந்த அளவு ஒரு சுத்தமான சுகாதாரமான ஒரு நகரமாக இது என்னைக்கு இருக்கிறது.

கோவையில் சிறுகுரு தொழில்கள் ஏராளம் வேடந்தாங்களாக எத்தனையோ லட்சம் மக்களுக்கு இது வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற ஒரு மாநகரமாக சிறந்து விளங்கியதுதான் நமது கோவை மாநகர்.அதேபோல என்.டி.சி.மில்கள் அனைத்துமே இன்றைக்கு மூடப்பட்ட ஒரு அவல நிலையிலே இன்னைக்கு கோவையை நாம் பார்க்கும் போது உண்மையிலே என் மனசு வலிக்குது. ஏன்னா ஒரு காலத்துல மிகச்சிறந்த விளங்கிய நகரம் எத்தனையோ கோடி கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிய ஒரு இடம் இன்றைக்கு இத்தனை ஆலைகளும் மூடப்பட்டு வேலைவாய்ப்பு என்பதே ஒரு கேள்விக்குறியாக அமைந்திருக்கிறது என்றால் இதற்கு யார் காரணம் என்பதை மக்களாகிய நீங்கள் உங்கள் அத்தனை பேருமே நாம் பார்த்து கேட்டுக்குறேன் இப்ப இருக்கின்ற இந்த இடங்கள் எல்லாமே கட்டிடங்களாக மாறிக்கொண்டிருக்கிறது.
அது மட்டும் கிடையாது. திமுகவினரும் சரி அவங்க பினாமிகளும் சரி இங்கு இருக்கின்ற ஆலைகள் எல்லாம் மூடி கட்டிடங்களாக மாற்றி வேலை வாய்ப்பு என்பதே ஒரு கேள்விக்குறி என்ற நிலையை இந்த இடத்திலே அவங்க உருவாக்கி இருக்காங்க அது மட்டும் இல்லாமல், இன்னைக்கு சென்ட்ரல் கவர்மெண்ட்ல இன்னைக்கு மோடிஜி அவர்களுடைய ஆட்சி எங்கு பார்த்தாலும் ஜிஎஸ்டி என்ற ஒன்று வந்த பிறகுதான் இந்த தொழில்கள் அத்தனையுமே முடங்கப்பட்டு மீன்கள் அத்தனை மூடப்படுகின்ற ஒரு அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.சிறுகுறு தொழில்கள் அதிகமாக உள்ள கோவை மாவட்டத்தில் 300 சதவிகிதம் மின் கட்டண உயர்வை மத்திய மாநில அரசுகளுக்கு இந்த கூட்டணியின் சார்பாக எங்களுடைய கண்டனத்தை இந்த நேரத்திலே நாங்கள் பதிய வைக்கிறோம்.இங்கு இருக்கின்ற அனைத்து தொழில்களுமே பாதிக்கப்பட்டு இருக்கிறது.

அதனால் தான் இங்க எப்ப பார்த்தாலும் நம்ம நிலை நிச்சயமாக மாறி இங்க மீண்டும் இது தொழில் நகரமாக மாற்றி உறுதியாக நமது வெற்றி வேட்பாளர் ஸ்ரீ ராமச்சந்திரன் அவர்கள் மக்களுக்காக உழைத்து கோவையை மீண்டும் தொழில் நகரமாக்குவார் என்பதை நான் உறுதி அளிக்கிறேன்.இங்கு சிங்காநல்லூர் பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடி தண்ணீர் வருகிறது.அப்போ இங்கே இருக்கின்ற மக்களின் வாழ்வாதாரம் என்ன என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி குறி,கோவை என்றாலே சிறுவாணி தண்ணீர் என்பது உலக பிரசித்தி பெற்றது.மக்களுக்கு குடிதண்ணீர் இல்லை என்றது இந்த ஆட்சியின் அவலத்தை நமக்கு உள்ளங்களில் நெல்லிக்கனியாக தெள்ளத் தெளிவாக புரிய வைக்கிறது.இங்கு இருங்கிருக்கின்ற அனைத்து சாலைகளுமே மிக மோசமாக குண்டும் குழியுமாக சாலைகளாக இருக்கின்ற ஒரு நிலையே நம்மால பார்க்க முடிகிறது. மத்தியில் ஆளும் கட்சியும், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும் மக்களுக்கு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை,எந்தவித திட்டங்களையும் செய்யவில்லை என்பது இன்னைக்கு மக்களுடைய குமரலாக இருக்கிறது.இந்த அளவு சட்டம் ஒழுங்கு ஒரு பெரிய சீர்கேடாகவும் கஞ்சா பழக்கம் அதிகமாகவும், அதுமட்டுமில்லாமல் எந்த பகுதியில் பார்த்தாலும் டாஸ்மாக் கடைகளின் தலைவிரித்து ஆடுவதும் ,படித்த படிக்காத இளைஞர்களுக்கு யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லாத ஒரு நிலையையும் இருப்பதால் இன்னைக்கு தமிழ்நாடே தலைகுனிவாக இருக்கின்ற ஒரு நிலையை நாம் பார்க்க முடிகிறது .எனவே இந்த நிலைகள் எல்லாம் மாறி நமது ராமச்சந்திரன் பாராளுமன்றத்தில் போய் நம்ம தொகுதிக்காக பேசி அவர் குரலை அங்கு பதிய வைத்து நமது கோவை நாடாளுமன்ற தொகுதியின் உடைய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார் என தெரிவித்தார்.