• Thu. May 9th, 2024

கடலூர் என்எல்சியில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை…

ByB.MATHIYALAGAN

Dec 13, 2023

கடலூர் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது மத்திய குழு உறுப்பினர் உ வாசுகி மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி ஆறுமுகம் உதயகுமார் கருப்பையன் சுப்பராயன் திருவரசு இரவிச்சந்திரன் தேன்மொழி ராஜேஷ் கன்னா மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

என்எல்சி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் நிலம் கொடுத்த விவசாயிகள் காண்டராக்ட் தொழிலாளர்கள் சொசைட்டி மற்றும் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூடப்பட்டுள்ள அம்பிகா ஆரூரான் சக்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலவைத் தொகையை வழங்கவும் விவசாயிகள் பேரில் நிர்வாகம் வாங்கியுள்ள அத்தனை கடன்களையும் பைசல் செய்து விவசாயிகளுக்கு என்ஓசி வழங்கிட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் ஜூரம் இருமல் சளி உள்ளிட்ட டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட வட்டார அரசு மருத்துவமனை நகராட்சி. மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய பிரிவுகள் வசதிகள் டாக்டர்கள் இல்லாததால் வரும் நோயாளிகளை முண்டியம்பாக்கம் அல்லது பாண்டிச்சேரிக்கு அனுப்பும் நிலை உள்ளது தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையை நவீனப்படுத்த அனைத்து பிரிவுகளுக்கும் டாக்டர்களை நியமனம் செய்ய ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளையும் இங்கே உருவாக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *