• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புஷ்பாவுக்கு புரமோஷன் செய்த கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக விளையாடியவர். அதனால், தெலுங்கு சினிமா, பாடல்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த சில வருடங்களாகவே தெலுங்கு சினிமா பாடல்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அவர்களது நடனம், வீடியோக்களை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டமும் உண்டு.

நேற்று ‘புஷ்பா’ படத்தின் ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு டேவிட் வார்னர் நடனமாடி ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவைப் பார்த்த படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் எமோஜிக்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவிற்கு மட்டுமே 21 லட்சம் லைக்குகள் வந்துள்ளன.

மேலும், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடுவது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார் டேவிட் வார்னர். இன்று வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில் அவருடைய மூன்று குட்டி மகள்கள் ‘புஷ்பா’ படத்தின் ‘சாமி சாமி’ வீடியோவிற்கு நடனமாடிய ரீல் வீடியோவை வெளியிட்டுள்ளார் டேவிட் வார்னர். “அப்பா, அம்மா முன்பு குழந்தைகள் ‘சாமி சாமி’ பாடலுக்கு நடனமாடி முயற்சி செய்துள்ளார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.