வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சமூக நீதிக்கான திராவிட கொண்டாட்டம் என்ற பெயரில் திராவிட பொங்கல் விழாவினை முன்னிட்டு ஏழாயிரம் பண்ணையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

போட்டியில் டேஞ்சர் பாய்ஸ், கிழக்கு ஏழாயிரம் பண்ணை, தமிழ் சி சி, ஆர்.சி.சி. நேதாஜி வாரியார் பி.கே வாரியர்ஸ் உட்பட பத்து அணிகள் மோதின.
போட்டியினை வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளாளர் கிருஷ்ணகுமார் தொடங்கி வைத்தார்.
திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர். சி. சி. அணி, நேதாஜி வாரியார் இறுதிப் போட்டியில் மோதின. அதில் ஆர்.சி.சி. அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்க பணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் வழங்கினார்
திமுக கட்சியினர், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், கலந்து கொண்டனர்




