• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டி..!

Byவிஷா

Jan 22, 2024

“மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தவும் உங்கள் பயணத்தையும், நேரத்தையும் சேமிக்கவும்” என்ற தலைப்பை மையமாகக் கொண்டு கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டியை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் “மெட்ரோ இரயிலை பயன்படுத்தவும் – உங்கள் பணத்தையும் நேரத்தையும் சேமிக்கவும்”என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கிரியேட்டிவ் டிசைன் போட்டியை நடத்துகிறது. கல்லூரி மாணவர்கள் சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவர்களின்ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டை ஊக்குவிக்கவும் மற்றும் மேம்படுத்துவதே போட்டியின் நோக்கமாகும். இந்த முயற்சிமாணவர் சமூகம் மத்தியில் சென்னை மெட்ரோ இரயில் சேவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான ஒருபடியாகும்.
இந்த போட்டியில் பங்குபெற ஆன்லைன் படிவம் மூலமாக பதிவு செய்ய வேண்டும். நாளை ஜனவரி 23ம் தேதி முதல் பிப்ரவரி 22, 2024 வரை போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களது கிரியேட்டிவ் டிசைன்களை பதிவு செய்யலாம். போட்டியில் பங்கு பெறுவதற்கு சென்னையில் உள்ள அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களும் தகுதியுடையவர்களாவர்.
மாணவர்கள் தங்களது கிரியேட்டிவ் டிசைன்களை வீடியோக்கள், அனிமேஷன்கள், ஆடியோ காட்சிகள் அல்லது GIF-கள் என எந்த வடிவத்திலும் குறைந்தது 30 வினாடிகள் முதல் அதிகபட்சமாக 60 வினாடிகள் கால அளவில் உருவாக்கலாம்.
போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000, 2வது பரிசாக ரூ.10,000, 3வது பரிசாக ரூ.5,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கு பெற https://forms.gle/oa3qyGG3kmW2vHn16 இணைப்பில் பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு, [email protected] என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும். (“Creative Design Competition for Students”) என்ற தலைப்பில் (Subject) உள்ள மின்னஞ்சல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்,