தமிழ்நாட்டில் புதியதாக புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,
புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதிய மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது. காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சிகள், 5 ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சி, 18 ஊராட்சிகள், அருகே உள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதை அடுத்து தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது
வணிக நிறுவனங்கள் சுற்றுலா பயணிகள் என அனைவரும் பயன் பெறும் வகையில் புதிதாக நான்கு மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்வதால் மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம்
