• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோர விபத்து : கார் மோதி என்ஜினீயர் பலி

By

Sep 16, 2021

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் பி.டெக் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை வேலை முடிந்து அச்சரப்பாக்கம் செல்வதற்காக கடப்பேரி ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம் பஸ் நிலையம் செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது ..குரோம்பேட்டையில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி வந்த அதிவேகமாக கார் அர்ஜூன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான அர்ஜூன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முதற்கட்ட விசாரனை நடத்திய போது,காரை ஓட்டி வந்தவர் பெருங்களத்தூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்த நிலையில் , கைது செய்து சிறையில் அடைத்தனர்.