
மதுரையில் 42 கோடிக்கு போடப்பட்ட புதிய நெடுஞ்சாலை – திறப்பு விழாவிற்கு முன்பே சாலை முழுவதும் விரிசல், பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டு பணிகள் முடித்த பின்பும், ஆறு மாதங்களுக்கு மேலாக திறக்கப்படாத நெடுஞ்சாலை காரணம் என்ன?..
மதுரை திருப்பரங்குன்றம் கோவில் அருகே தென்கால் கண்மாயில் உள்ளது. இந்த கண்மாயை நம்பி அவனியாபுரம், அயன் பாப்பாக்குடி உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் பலன் அடைந்துவருகிறது. இந்த நிலையில் இந்த கண்மாய் கரையானது மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் மூலக்கரை மற்றும் விளாச்சேரி வரை உள்ளது.

இந்த கண்மாய் கரைக்கு மேல் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைப்பதற்கு 42 கோடி மதிப்பீட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் பணிகள் ஆரம்பிக்கும்போது கண்மாய் ஓரங்களில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன..இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அதன் பின்னர் அரசு தரப்பில் கண்மாய்க்கு எவ்வித இடையூறும் இல்லாமல் அடுத்தடுத்த சாலை அமைக்கப்படும் என ஒப்புதல் பெற்று பணிகள் தொடங்கியது.
இந்த சாலை பணிகள் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது பணிகள் இறுதி கட்டப் பணிகள் முடிவதற்கு முன்பே சாலைகள் விர்சலிட தொடங்கியது.
விரிசல் ஏற்பட்ட இடங்களில் *மாவீரன் படப்பாணியில் ஆங்காங்கே பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டது பொங்கலுக்கு திறக்கப்படும் என தெரிவித்த நிலையில் சாலையின் உறுதித் தன்மை குறித்து சந்தேகம் எழுந்தது கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு இரண்டு நாட்கள் சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் மூடப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பணிகள் முடிந்தும் சாலைகள் திறக்கப்படாத நிலையில் உள்ளது.
இதனால் திருமங்கலத்தில் இருந்து மதுரை மாநகர் நோக்கி வரக்கூடிய இந்த நெடுஞ்சாலையில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
மதுரை தென்கால் கண்மாய் கரையில் சாலை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னரே விரிசல் அடைந்து ஆறு மாதங்களுக்கும் மேலாகியும் திறக்கப்படாமல் இருப்பதாகவும் இதனால் பல்வேறு விபத்துக்கள் வந்த போது நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் நெடுஞ்சாலை உறுதி தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
