• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!

Byஜெபராஜ்

Feb 21, 2022

பிப்.,19ம் தேதி, நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட உள்ள நிலையில் மதுரையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்கள் பல்வேறு ஏற்பாடுகளுடன் தயாராகி வருகின்றன.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி 3 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 57.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் அனைத்து வாக்குச் சாவடிகளில் இருந்தும் இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் மண்டல வாரியாக, மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரிகள், வக்பு வாரிய கல்லூரி மற்றும் பாத்திமா கல்லூரியிகளில் வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இடங்களை பார்வையிட்டு தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.