கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் செல்வம் வயது 39 இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார்.

இவர் தனக்கு சொந்தமான வயலில் கொட்டகை அமைத்து அதில் லேப்டாப் பிரிண்டர் வைத்து கள்ளநோட்டு அச்சடிப்பதாக இராமநத்தம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை வயலில் உள்ள கொட்டகையில் தனிப்படை போலீசார் வருவதை கண்டதும் கும்பல் தப்பி ஓட்டம்.






