விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அழகை நகர் பகுதியில் பீமா டெக்ஸ்ட் என்ற பெயரை மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த முருகானந்த ராஜா மகன் குருநாதன் கடந்த ஏழு வருட காலமாக இந்த பகுதியில் நூற்பாலை நடத்தி வருகிறார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நூற்பாலைக்கு விடுமுறை பணியாளர்கள் யாரும் வேலைக்கு வராத நிலையில் திடீரென நூற்பாலையில் தீப்பிடித்து எரிவதாக நூற்பாலை அருகில் இருந்தவர்கள் குருநாதனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் இந்த தகவலை அடுத்து குருநாதன் இராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துச்செல்வம் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் நூற்பாலையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் முற்றிலும் எரிந்து நாசமானது இந்த தீ விபத்து குறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














; ?>)
; ?>)
; ?>)