• Sat. Apr 27th, 2024

கொரோனா பாதிப்பு குறைவு…

Byகாயத்ரி

Nov 9, 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 266 நாட்களில் இல்லாத அளவுக்கு அன்றாட பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 332 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,126.இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 3,43,77,113 ஆகும். 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,982.மொத்தம் இதுவரை குணமடைந்தோர் 3,37,75,086 ஆகும்.


நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.25% என்றளவில் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.கடந்த 24 மணிநேரத்தில் 332 பேர் உயிரிழந்துள்ளனர் .கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த உயிரிழப்புகள் 4,61,389 எட்டியுள்ளது.1,40,638 சிகிச்சையில் உள்ளனர்.இது கடந்த 263 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.


வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 1.127% ஆக உள்ளது. இது கடந்த 43 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.தினசரி பாசிடிவிட்டி விகிதம் 1.35% ஆக உள்ளது. இது கடந்த 33 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.


இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,09,08,16,356 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 59,08,440 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *