• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வெறும் 5 நாட்களில் 1.5 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

Byகாயத்ரி

Jan 7, 2022

கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகம் 530 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் இதை திறந்து வைத்தார். விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின்போது பேசிய பிரதமர்: கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ள மொத்த மக்கள் தொகையில், 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர் . வெறும் 5 நாட்களில் 15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 1.5 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உள்ள மூத்த குடிமக்களின் முழங்கால் மாற்று சிகிச்சைக்கான செலவையும் மத்திய அரசு குறைத்துள்ளது. ஆண்டுக்கு 1,500 கோடி குறைப்பானது ஏழை மக்களுக்கு உதவுகிறது. பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் மூலம் 12 லட்சம் ஏழைகள் இலவச டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.