• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

திருஞ்செங்கோட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்!

By

Sep 12, 2021 ,

திருச்செங்கோடு வட்டார மருத்துவ அலுவலகத்திற்கு உட்பட்ட 58 மருத்துவ முகாம்கள் மற்றும் 8 மொபைல் மருத்துவ முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் மல்லசமுத்திரம் பகுதியில் 30 மருத்துவ முகாம்கள், 3 மொபைல் முகாம்களிலும் மாணிக்கம்பாளையத்தில் 36 மருத்துவ முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் 55 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், இன்னும் 45 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியதாகவும் வட்டார மருத்துவ அலுவலர் அருள் குகன் தெரிவித்துள்ளார்.