• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55 ஆக உயர்வு – மாணவர்களிடையே அச்சம்

ByA.Tamilselvan

Apr 23, 2022

கடந்து சில நாட்களாகவே கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதகரித்து வருகிறது.கொரோனா வைரஸில் மரபணு மாற்றுமே இந்த பரவலுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் 4 வது அலை துவங்கியுள்ளதாகவும் ஜூன் மாதத்தில் உச்சம் தொடும் என்றும் தெரிகிறது.
ஐஐடியில் ஏற்கனவே 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மேலும் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை ஐஐடியில் கடந்த 4 நாட்களில்1420 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதால் தமிழக அரசு விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. 2 ஆண்டுகளாக கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு இருந்து வந்தது. பாதிப்பு குறைந்ததால் கடந்த ஒரு மாதமாக தளர்த்தப்பட்டது. முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது எனவும் அரசு அறிவித்தது.
கொரோனா தொற்று, தற்போது, பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு, சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் முகக்கவசம் கூட அணியாமல் சாலைகளில் சுற்றத் தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு முகக்கவசம் கட்டாயமில்லை என்று சொல்லவில்லை என்றும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று தினசரியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஐஐடியில் கொரோனா உறுதியானவர்களில் பலரும் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வரும் மே 8ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் ஒரு லட்சம் இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ஐஐடியில் கடந்த 4 நாட்களில் மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பொது இடங்களில் முககவசம் ,தனிமனித இடைவெளி, உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின் பற்ற அறிவுத்தப்பட்டது.கொரோனா பரவல் அதிகரித்தாலும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.