இந்திய கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெஸ்ட்இண்டீஸ் தொடரில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள நவ்தீப் சைனிக்கும் கொரோனா தொற்று உறுதி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.