• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாட்டில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,273 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,273 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,439 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 243 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 4,22,90,921 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,13,724 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 1,11,472 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 24,05,049 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 1,77,44,08,129 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.