• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜப்பானில் கொரோனா 7ஆவது அலை

ByA.Tamilselvan

Aug 21, 2022

ஜப்பானில் கொரோனா 7ஆவது அலை உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 2,61,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 294 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,000ஐ நெருங்கியுள்ளது.
ஜப்பானில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் சுகாதார கட்டமைப்பே ஆட்டம் கண்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு ஆளான 15 லட்சம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.600க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கவலைக்குரிய நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டன.ஜப்பானில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வீடு திரும்புவதால், இந்த பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.அத்துடன், நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஜப்பான் தீவிரப்படுத்தியுள்ளது. அந்நாட்டில் 31% பேர் நான்கு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.