• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கொரோனா 4 வது அலை துவக்கம் முகக்கவசம் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

ByA.Tamilselvan

Apr 20, 2022

பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமே. அதிலிருந்து அரசு விலக்களிக்கவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் கட்டுக்குள் இருந்த கரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.கரோனா ஒமிக்ரான் வைரஸின் புதிய XE திரிபால் சீனா, ஹாங்காங், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களிஸ் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேல் அன்றாட தொற்று பதிவாகிறது. இந்தியாவில் ஜூன் மாதம் அடுத்த கரோனா அலை பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்”டெல்லி, ஹரியாணா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல் வருகிறது.
அரசு, முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களித்துள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கரோனா வழிகாட்டு நெறிமுறையிலிருந்து விலக்களிக்கவில்லை. எனவே முககவசிம் அணிவது கட்டாயம் .இதுவரை ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாதோர் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவேண்டும்.தேவைப்பட்டால் மாவட்டந்தோறும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும்” என்றார்.