• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் வீட்டிலிருந்து கூல் சுரேஷ் சுவரேறி குதித்து தப்பிக்க முயற்சி..!

Byவிஷா

Dec 13, 2023

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை சமாளிக்க முடியாமலும், விரக்தி மற்றும் மன அழுத்தத்தாலும் கூல் சுரேஷ் சுவரேறி குதித்து தப்பிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் புயல் காரணமாக பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கவும் வாய்ப்புண்டு என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, டபுள் எவிக்ஷனில் ஆர்.ஜே. பிராவோவும், அக்ஷயாவும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டபுள் எவிக்ஷன் பயத்தாலும் பிக் பாஸ் வீட்டின் அழுத்தத்தாலும் நடிகர் கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றிருக்கிறார். இதனைப் பார்த்த மணி அவரை கீழே இறக்கி விட்டிருக்கிறார். கூல் சுரேஷை அழைத்த பிக் பாஸ், ” கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
.இந்தத் தளம் உங்களை மாற்றும். நீங்கள் இதுபோன்ற முடிவெடுத்தால் அது உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும். இனிமேல் பிரச்சினை என்றால் என்னைக் கூப்பிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.இதனைக் கேட்டு அழுத, நடிகர் கூல் சுரேஷ் ‘சரிங்க சார். இனி இது போன்று செய்ய மாட்டேன்’ எனக் கூறியுள்ளார். முன்பு பிக் பாஸ் முதல் சீசனில் பரணி இதுபோல சுவர் ஏறி தப்ப முயன்றது குறிப்பிடத்தக்கது.