திருவாதிரை களி:
ஆருத்ரா தரிசனம் அன்று திருவாதிரை களி இல்லாமல் பூஜை நடக்காது. அந்த அளவிற்கு இந்தக் களி முக்கியத்துவம் வாய்ந்தது. திருவாதிரைக் களி வீட்டில் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசிரவை – 1 கப், பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், கடலைபருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – முக்கால் கப், தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன், நெய் – 3 டேபிள்
ஸ்பூன், முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சிறிதளவு
செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் பருப்பு, ஆரிசியை ரவை போல் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, 3 டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை கரைய விடவும். நன்கு கரைந்ததும் வடிகட்டி, கொதிக்க விடவும். பின்பு, 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ரவைகளை போடவும். தீயை குறைத்து கட்டி சேராமல் நன்கு கிளறவும். தேவைப்பட்டால் சுடு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைத்து, நடுநடுவே கிளறி விடவும். ரவை வெந்ததும் தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி தூவி கிளறி இறக்கவும். இப்போது சுவையான திருவாதிரை களி தயார்.
சமையல் குறிப்புகள்
