• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Jan 13, 2022

காராபூந்தி பச்சடி

தேவையானவை:
காராபூந்தி – ஒரு கப், கெட்டி தயிர் – ஒன்றரை கப், கடுகு, உளுந்தம்பருப்பு – கால் டீஸ்பூன், சீரகம் – சிறிதளவு, எண்ணெய் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தயிருடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் தாளித்து, தயிருடன் சேர்க்கவும். பரிமாறுவதற்கு முன் காராபூந்தி சேர்த்துப் பரிமாறவும்.