சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குக்கர் வெடித்ததில் சமையல் பணியாளர் படுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணிபுரிபவர் நந்தினி நேற்று காலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவிற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ காலை 7 மணிக்கு வருவதாக தகவல் வந்துள்ளது இதனால் காலை உணவை தயாரிக்கும் பணியில் இருந்த நந்தினியை எம்எல்ஏ வருவதற்குள் உணவை சமைக்க வேண்டும் என நிர்வாகிகள் அவசரப்படுத்தியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நந்தினி அவசர, அவசரமாக சமையல் செய்த போது, அதிக வெப்பம் தாங்காமல் குக்கர் வெடித்ததில் நந்தினி வயது 35 படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் பத்துக்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இவர் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 14 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வருகிறது. மேலும் கண்பார்வை பறிபோகும் நிலையில் இருப்பதாகவும், தகவல் வருகிறது. இதுவரை எம்எல்ஏ தரப்பில் எந்த ஒரு உதவிகளையும் செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.