• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

ByKalamegam Viswanathan

Oct 23, 2024

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 56வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 359 பேருக்கு முனைவர் பட்டமும், 54 ஆயிரத்து 7 நூற்றி பதிநான்கு பேருக்கு பட்டளித்தார். 54 714 பேரில் 26306 ஆண்களும், 26 ஆயிரத்து 408 பெண்களும் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 56 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் முதன்மை விருந்தினராக உயர் கல்வித் துறை அமைச்சர் செம்மொழி, மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் சுதா சேஷய்யான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்கவில்லை.மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்குகிறார்.

கடந்தாண்டு உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரைத்த நிலையில் அதனை ஆளுநர் நிராகரித்திருந்தார். இதனால் 55வது பட்டமளிப்பு விழாவை அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்து இருந்தார்.

இந்நிலையில் இந்தாண்டு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் 54714 பேருக்கு, 359 பேருக்கு டாக்டர் பட்டம், 26306 ஆண்கள், 26408பெண்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கப்பட உள்ளது.

கடந்த சில தினங்கள் முன்பு ஆளுநர் பங்கேற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடபட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் ”தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரி விடுபட்டிருந்தது. இது சர்ச்சைக்குள்ளான நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்களது கண்டனத்தை முன்வைத்துள்ளன.

இந்த நிலையில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவை முழுவதுமாக புறக்கணித்து வந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தமிழ் மொழி, தமிழ் தாய் வாழ்த்து பாடலை அவமதிக்கும் போன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம் இதன் காரணமாக தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.