• Sat. Mar 28th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

தவெக கட்சி பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சை..,

BySubeshchandrabose

Mar 27, 2026

அரசியல் விமர்சகரும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் உதவியாளருமான பொன்ராஜ் என்பவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பெண்கள் குறித்து தரக்குறைவாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்களது கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

மேலும் நேற்று இரவு சென்னை டிஜிபி அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரடியாக சென்று பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடக்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் மகளிர் அணியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்

பொன்ராஜ் கூறிய கருத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பெண்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் எதிராகவும் மிகவும் மோசமான தரம் தாழ்ந்து கருத்தைத் தெரிவித்துள்ளார்.

என்றும் அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளிக்கப்பட்டது.