
ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்…

பணி நிரந்தரம், மாவட்ட ஆட்சியர் அறிவித்த 770 சம்பளம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வைப்பு நிதி ரசிதை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த நான்கு நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து நாங்கள் ஆதரவாளிப்போம் என்று தெரிவித்துச் சென்றார்.
இந்நிலையில் ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்துவதற்கு தூய்மை பணியாளர்கள் வருகை புரிந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போராட்டத்திற்கு வருபவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
