• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தொடரும் பதக்க வேட்டை.. வெள்ளி வென்றார் வெற்றி நாயகன் மாரியப்பன்!

கடந்த 2015 ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் (டி63) தமிழகத்தை சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் தங்கம் வென்று அசத்தினார். அதை தொடர்ந்து டோக்கியோ பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம் வெல்வாரா என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் டி(63) போட்டி இன்று , இந்திய நேரப்படி மாலை 3.55 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்ட உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று, தமிழகத்திற்கு மீண்டும் ஒருமுறை பெருமை சேர்த்துள்ளார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீரரான சரத்குமார் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.