• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நேரு நினைவுக் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணவர்வு தினம்

ByKalamegam Viswanathan

Mar 19, 2023

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் “நுகர்வோர் விழிப்புணவர்வு தினம்” கொண்டாடப்பட்டது. அதில் கல்லூரித்தலைவர் பொன். பாலசுப்ரமணியன் , கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.


நிகழ்வில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் த.காயத்ரி வரவேற்புரை வழங்கினார். “திருச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் செயலர் . புஷ்பவனம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்லூரியின் “நுகவர்வோர் பாதுகாப்பு குழுவை” துவக்கி வைத்து, நுகர்வோர் விழிப்புணர்வு குறித்தும், பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கிக் கூறினார். மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கும் விளக்கமளித்தார். மேலும் விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சு.குமாரராமன் கலந்து கொண்டு துவக்கவுரை ஆற்றினார். இறுதியில் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் சுமார் 148 மாணவர்கள் கலந்துகொன்டு பயன்பெற்றனர். 25 மாணவர்களை தன்னார்வலர்களாக தேர்ந்தெடுத்து அவர்களின் வாயிலாக கிராமப்புர நுகர்வோர் பயன்படுத்தக்கூடிய நீர், சமையல் எண்ணெய் மற்றும் உணவுப்பொருட்களை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆராய்ச்சி கூடத்தில் ஆய்வு செய்வதற்காக மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது