• Fri. Apr 26th, 2024

சென்னையில்-தூத்துக்குடி வரை எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணி- ஐஓசி நிர்வாக இயக்குனர் பேட்டி

ByKalamegam Viswanathan

Mar 19, 2023

சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை ரூ 6025 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் பூமிக்கடியில் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது – பணி நிறைவு பெற்று தொழிற்சாலைகள் முதல் வீடுகள் வரை பைப்லைன் மூலம் எரிவாயு கிடைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தலைவர் அசோகன் பேச்சு. – வாடிக்கையாளர்களுக்கு பைபர் (பிளாஸ்டிக்) காம்போ வடிவில் சிலிண்டர் விநியோகம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள இந்திய ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கில் , தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. முன்னதாக, ஐஓசி – யின் மாநில தலைவரும் , நிர்வாக இயக்குனருமான அசோகன் நிருபர்களை சந்தித்து பேசிய போது,
ரூபாய் 6025 கோடி செலவில் சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை பூமிக்கடியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இக்குழாயில் எரிவாயு அனுப்புவதற்கான பணிகள் ஓரிரு மாதத்தில் நிறைவு பெறும் . தற்போது சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை இப்பணி நிறைவு பெற்றதாகவும், செங்கல்பட்டில் இருந்து திருச்சி , மதுரை, தூத்துக்குடி வரை இப்பணியில் விரைந்து முடிக்கப்பட்டு, இந்த எரிவாயு குழாய் மூலம் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு எரிவாயு அனுப்பும் பணி துவங்கும் எனவும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மாநிலத் தலைவரும் நிர்வாக இயக்குனமான அசோகன் தெரிவித்தார். மேலும் தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர் இரும்பினாலானதற்கு பதிலாக, பைபர் (பிளாஸ்டிக்) காம்போ வடிவில் ஐந்து கிலோ பத்து கிலோ சிலிண்டர்கள் தயார் செய்யப்பட்டு ,விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது . மேலும் இந்த சிலிண்டர் பெண்கள், குழந்தைகள் கையினால் எளிதில் தூக்க முடியும். இந்த சிலிண்டரில் எரிவாயு குறைய , குறைய அதன் அளவை பக்கவாட்டில் தெரிந்து கொள்ளலாம். இந்த பைபர் சிலிண்டரால் விபத்து ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.இந்த சிலிண்டர் வாடிக்கையாளர் பெறுவதற்கு டெபாசிட் தொகையாக 10 கிலோவிற்கு ரூபாய் 3500/- செலுத்த வேண்டும் எனவும் அசோகன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அந்த கிட்டங்கியில் , தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. அங்குள்ள பெட்ரோல் சேமிப்பு கலனில் கசிவு ஏற்படுவதை அறிந்து, எச்சரிக்கை அலாரம் அடித்தவுடன் ஆங்காங்கே பணியாளர்கள் அவர்களது பணியை துரிதமாக செயல்பட்டு, தீ விபத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் உண்மை சம்பவமாக நடத்தப்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *