மதுரையில் நிகழ்ந்த கனமழை பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மதுரை தனியார் விடுதியில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் கே என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி, பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், முர்த்தி PTR. தியாகராஜன் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் சங்கீதா, ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மதுரை கனமழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து விவரங்கள் , மீட்பு பணிகள் சேதவிவரங்கள் ஆட்சியர், ஆணையர் விளக்கி கூறினர்.
மேலும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்து வருகிறார்கள்.
மேலும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெள்ளசேதம் பாகித்தநிதி விவரங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.