• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

ByS. SRIDHAR

Apr 28, 2025

பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சிவிஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அன்னவாசல் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலத்தூரில் பூத் கமிட்டி அமைப்பது , இளைஞர் இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது மற்றும் இளம் தலைமுறை விளையாட்டு அணியில் புதிய விளையாட்டு வீரர்களை இணைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையிலும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர், முன்னாள் MLA சதன் பிரபாகர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளும், பொதுமக்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் ராமசாமி, ஒன்றிய கழக செயலாளர் சுப்பையா உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.