மதுரை நாமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மஹாலில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைவர் செல்ல பாண்டியன் தலைமை வகித்தார்.கௌரவ தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.செயலாளர் அன்புராஜ் வரவேற்புரை கூறினார் .

தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் ஆலோசனைகூட்டத்தில் ஈரோடு. தர்மபுரி, திருச்சி, சேலம் , கரூர் திண்டுக்கல், ராமநாதபுரம் ,தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து முட்டை கொள்முதல் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
முட்டை கொள்முதலில் தினசரி விலை ஏற்றத்தினால் வியாபாரிகள் மட்டும் அல்லாமல் பொதுமக்களும் பாதிக்கப்படுவதால் வாரம் இருமுறை என முன்போல் விலை நிர்ணயம் செய்ய கோரிக்கையை வைத்துள்ளனர்.
திடீரென முட்டை கொள் முதல் விலை நிர்ணயம் செய்வதும் விலையை குறைப்பதாலும் கொள் முதலில் பாதிப்படைகிறது. இதனால் வியாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
மேலும் நாபா முட்டை விலையை நிர்ணயம் செய்து அதன் பின் போக்குவரத்துக்கான கட்டணத்தையும் தனியாக சேர்ப்பதால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

ஆகவே கொள்முதல் நிலையுடன் வாகன செலவையும் சேர்த்து நிர்ணயம் செய்ய தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
முட்டை வியாபாரிகள் நல வாரியம் அமைக்கவும் அரசுக்கு கோரிக்கை உள்ளிட்ட 9 கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சேலம் மாவட்ட தலைவர் சுந்தரராசு ஈரோடு மாவட்ட தலைவர் ஜி பாரதி நன்றியுரை கூறினார்.








