• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னை வடபழனி பேருந்து பணிமனையில் விபத்து தடுப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம்

Byஜெ.துரை

Feb 12, 2023

சென்னை வடபழனி பேருந்து பணிமனையில் சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் ஓட்டுநர் மற்றும் நடத்தினருடன் விபத்து தடுப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
சென்னைவடபழனியில் உள்ள பேருந்து பணிமனையில் விபத்து தடுப்பு குறித்து சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது இந்த முகாமில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் விபத்து நடக்காமல் இருக்க
வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார்.
அதன் பின்பு ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் விபத்தை தடுக்க காவல்துறையாகிய நாங்கள் உங்களுக்கு எந்த விதத்தில் உதவி புரிய வேண்டும் என்று கேட்டதற்கு :ஒட்டுனர்கள் அவர் அவர் பயணம் செய்யும் தடம் வழியில் காவல் துறை ஒத்துழைப்பு இல்லாமல் படும் சிரமங்கள் பற்றியும் குறிப்பாக பள்ளி கல்லுரிகள் விடும் நேரங்களில் பெற்றேர்கள் அவரது வாகனங்கள் மூலம் தனது குழந்தைகளை அழைத்து செல்ல வருவதால் அந்த நேரம் சாலையோரம் மிகுந்த நெருக்கடிக்குள் சிரமபடுகிறோம். அது மட்டும் இன்றி கார்ப்ரேஷன் இரவு பள்ளம் தோண்டு கிறார்கள் காலை வரை அந்த பள்ளம் அப்படியே இருக்கின்றது இதனால் எங்களுக்கு வாகனம் ஒட்ட மிகவும் சிரமம் படுகின்றோம் இந்த சிக்கலான பகுதியில் காவல் துறை எங்கள் வாகனங்கள் செல்லவும் பொதுமக்களுக்கு தகுந்த வழியை சரி செய்து கொடுக்கவும் காவல் துறை வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.


ஒட்டுனர் கூறிய குறைகள் எல்லாவற்றையும் குறித்துக் கொண்ட காவல் துணை ஆணையர் இது நாங்கள் உங்களுக்கு சரி செய்து தருகிறோம் நமது நோக்கம் விபத்து நடக்காமல் இருப்பது என்று கூறினார். இந்த விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டத்தின் போது விருகம்பாக்கம்( R5) போக்குவரத்து ஆய்வாளர் எஸ். ராதா கிருஷ்ணன், வடபழனி (R8)போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாம் பெனட் , மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேஷ், ரமேஷ், எஸ்.எஸ்.ஐ. ரவி, போக்குவரத்து காவலர்கள் செந்தில், ஆனந்த் பாபு, ராஜேந்திரன். மற்றும் வடபழனி அரசு பேருந்து ஒட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பலர் கலந்து கொண்டனர்.அதன் பின்பு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சக்திவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.