புதுக்கோட்டை நீலம் பண்பாட்டு மையம் சார்பில் எஸ்சி, எஸ்டி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி மாவட்ட அறிவியல் இயக்க கட்டிடத்தில நீலம் பண்பாட்டு மையம் மாவட்ட செயலாளார் முருகானந்தம் ஏற்பாட்டில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினர்.

ஆதிதிராவிட நல்ல குழு மற்றும் விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
மத்திய மாநில அரசு ஒதுக்கும் எஸ்சி எஸ்டி திட்டத்திற்கு வழங்கும் தொகையை ஆதிதிராவிடர் மக்களுக்கு செலவு செய்து மக்களை காக்க வேண்டும்.
தாட்கோவில் வழங்கப்படும் வங்கி கடன்களுக்கு வங்கிகள் எவ்வித பினையும் வாங்கக்கூடாது.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் ஆதிதிராவிட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர்













; ?>)
; ?>)
; ?>)