ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் , தலைமை மருத்துவர் காளிராஜ் முன்னிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளர்கள், புறநோயாளர்கள் பொதுமக்கள், மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனையில் நடைபெறும் சிகிச்சைகள், அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும் தலைமை மருத்துவர் காளிராஜ் எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்வில் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி , மருத்துவமனை ஊழியர்கள் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள்,பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட மருத்துவமனையில் உள்ளது போல் கூடுதல் பல்வேறு வசதிகளை வேண்டி பேசினர் .
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் பேசியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை ஒரு பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இம் மருத்துவமனையை நமது வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
பஸ் நிலையம் அருகே இருப்பதால் அனைத்து கிராம மக்களுக்கும் விரைந்து மருத்துவம் பார்க்க இது பயனுள்ளதாக இருக்கிறது. விருதுநகர் மாவட்ட மருத்துவமனைக்கு இணையான இன்னும் பல வசதிகள் அனைத்து மக்களுக்கும் செய்து தர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், மருத்துவமனை தலை மருத்துவரும் அனைத்து முயற்சியும் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்தார்.