• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காவலர்கள் தங்கள் வாகனங்களில் “போலீஸ்” ஸ்டிக்கர் ஓட்ட தடை…

Byகாயத்ரி

Jul 19, 2022

தமிழ்நாட்டில் காவலர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் “போலீஸ்” என்ற ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல் பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். காவலர்கள் பலர் தங்கள் சொந்த இருசக்கர வாகனங்களில் “Police” என்ற ஸ்டிக்கரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இதுகுறித்து காவல்துறையினருக்கு புதிய உத்தரவிட்டுள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றும், இதுவரை ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை நீக்கும் படியும் உத்தரவிட்டுள்ளார். காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களில் மட்டுமே “காவல்” என்ற ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.