• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

“சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்

ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார்கள்.
ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து.குமரி முதல் காஷ்மீர் வரை தினமும்.பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு வகையான போராட்டங்கள் தினம் நடந்து வரும் நிலையில்.
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல், களியக்காவிளை வரை தினமும் நடக்கும் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில்.நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில்.காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார்கள்.
நாகர்கோவிலில் உள்ள அனைத்து சமுதாய “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து.மொட்டை அடித்து, இரங்கல் தெரிவித்தும்.காங்கிரஸ் கட்சியினர் அவர்களது கண்டனத்தை தெரிவித்த நிகழ்வு நாகர்கோவில் பகுதியில் ஒரு பரபரப்புடன் பொது வெளியில் ஒரு பேசு பொருளாகி உள்ளதை.காங்கிரஸ் கட்சியினர் தங்களின் வித்தியாசமான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தெரிவித்தார்.