• Sat. Apr 20th, 2024

காங்கிரஸ் தலைவர் தேர்தல்- வாக்காளர் பட்டியல் 20-ந் தேதி வெளியிட முடிவு

ByA.Tamilselvan

Sep 11, 2022

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படும் என தகவல்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோர் 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ந் தேதி கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வருகிற 22-ந்தேதி வெளியாகுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வாக்காளிக்க இருப்பவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *