• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்…வெளியான வாக்காளர் பட்டியல்..!

Byகாயத்ரி

Sep 13, 2022

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 9,100 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதுவும், கியூஆர் கோட் கொண்ட வாக்காளர் அட்டை தயாராக இருப்பதாகவும், வாக்காளர் அட்டைகள் நாளை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ளது எனவும் தேர்தல் பொறுப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். சசி தரூர், மணீஷ் திவாரி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் வரலாற்றில் வாக்காளர் அட்டை முதன் முறையாக அளிக்கப்பட்டுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் முறையாக நடத்தப்படும் என்று தேர்தல் பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.