சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் வெம்பக்கோட்டை வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சியினர் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெம்பக்கோட்டை வடக்கு வட்டாரம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை வடக்கு வட்டார பகுதி தலைவர் செல்வக்கனி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி, விருதுநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ், விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கோட்டை பட்டி சுப்புராம் , சாத்தூர், வெம்பக்கோட்டை, ஆலங்குளம் ,பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி ஒரு காலத்தில் தமிழகத்தில் ஊரில் உள்ள பெரும் தலைவர் மற்றும் பெரிய மனிதர் என்பவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியாக தான் இருந்துள்ளார். அந்தக் காலத்தில் இருந்து அப்போதைய கட்சி நிர்வாகிகள் தலைவர்கள் தங்களது கொள்கையில் முரண்பாடு ஏற்படாமல் தற்பொழுது வரை தங்களது நிலைப்பாட்டை மாற்றாமல் தொடர்ந்து நமது காங்கிரஸ் கட்சியில் நீடித்து வருவது நமக்கு பெரும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது மேலும் காங்கிரஸ் கட்சியில் புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள் பலர் இணைந்துள்ளது கண்டு பெரும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது என்றார்.

ஆனால் தற்பொழுது காங்கிரஸ் கட்சியினர் மற்ற கட்சியினரைப் போல் கட்சியிலிருந்து சம்பாதிக்கும் நோக்கில் ஒருவரும் இல்லை என்றும் கட்சிக்கு உழைக்கும் வகையில் ஆர்வத்துடன் காங்கிரஸ் கட்சியின் நீடித்து வருவதாகவும் பெருமிதத்துடன் பேசினார். இனி வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பஞ்சாயத்து தலைவர்கள் கவுன்சிலர்கள் என பலர் தன்னை முன்னிலைப்படுத்தி வெற்றி பெற்று வருவதற்கு நமது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் உழைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் . தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு இலவச வேட்டி மற்றும் பயனடைகள் வழங்கப்பட்டது.