• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது-செல்லூர் ராஜு பேட்டி..,

ByKalamegam Viswanathan

Jan 14, 2026

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் புதியதாக கட்டிய கலையரங்கத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜீ பேசியதாவது:

தேர்தலை ஒட்டி திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக நாடகத்தை திமுக அரசு அறிவிக்கும்

பொதுமக்களின் கோரிக்கைகள் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என யார் தடுத்தாலும் சட்டசபைக்கு வந்து குரல் கொடுக்கலாம் என அறிவித்தார்

அரசு ஊழியர்களுக்கும் அவ்வா கொடுத்த அரசு இந்த அரசு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கூறி வெற்றி பெற்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகாலம் ஆட்சி முடிய போகும் தருணத்தில் புதியதாக ஒரு பெயரை சொல்லி திட்டம் என திமுக அறிவிக்கிறது ஆனால் அரசு ஊழியர்களோ போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்கட்சியாக இருந்த போது முதல்வர் பொங்கல் தொகுப்பு ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என சொன்னார் தற்போது ரூ.3 ஆயிரம் கொடுத்துள்ளார்.

மக்கள் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர் நிச்சயம் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.

ஜனநாயகன் சென்சார் குறித்து கேட்ட கேள்விக்கு:

இது குறித்து நடிகர் ஜீவா தனது ஜிப்சி படத்திலே சென்சார் போர்டு 48 இடத்தில் கட் செய்து விட்டனர் என கூறினார். முதலில் பாதிக்கப்பட்டவர் நடிகர் ஜீவா தான் அப்போது அவருக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை எனவும் இன்று அதே சென்சார் போர்டு குறித்து குரல் கொடுக்கின்றனர். எல்லாம் தேர்தலை மனதில் வைத்தே நடக்கிறது.

திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியே தற்போது சென்சார் போர்டை எதிர்த்து விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கிறது ஆதரவாக உள்ளது.

திமுகவிடம் 60 சீட் வேண்டும் என்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

ஜல்லிகட்டை பாரம்பரியமாக கிராம மக்கள் தான் நடத்த வேண்டும்

ஜல்லிகட்டு போட்டியை தடை செய்தது திமுக அரசு, அதன்பின் தன்னெழுச்சி போராட்டம் ஏற்பட்டு ஜல்லிகட்டு நடத்த எடப்பாடியார் பிரதமரிடம் நிலவரத்தை கூறி ஜல்லிகட்டு நடத்த காரணமாக இருந்தார்.

அதன் பின்னர் ஜல்லிகட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், ஜல்லிகட்டு போட்டியை திமுக அமைச்சர் பி.முர்த்தி தலையீட்டால் கட்சிகாரர்களுக்கே முன்னுரிமை தரப்படுவதாக கூறி அவனியாபுரம் மக்கள், காளை வளர்ப்பவர் எதிர்ப்பு தெரிவித்தனர் .

ஜல்லிகட்டு காளை வளர்ப்பவர்களுக்கு ரூ. ஆயிரம் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால் இன்றளவும் தரவில்லை, எனவே தற்போது அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கு வரும் முதல்வர் மற்றும் துணை முதல்வரை காளை வளர்ப்பவர்கள் பராமரிப்பு தொகை ஆயிரம் காளை வளர்ப்போர் சங்கம் கேட்க உள்ளனர்.

எனவே 2026 மீண்டும் அதிமுக கூட்டணி ஆட்சியமைக்கும் எடப்பாடி தான் முதல்வர் என்றார்.