• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் பிரமுகர் கடத்தல்..,

BySeenu

Jul 16, 2026

கோவை எஸ்.ஐ.எச். எஸ். காலனியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 53), காங்கிரஸ் பிரமுகர். இவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கடந்த 5-ந் தேதி கடத்தி சென்றது. இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அத்துடன் அந்த கும்பலுக்கு கோவை காளப்பட்டியை சேர்ந்த போலீஸ் கார்த்திக் (43) என்பவர் தலைவனாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. எனவே அந்த 6 பேரையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கும்பல் தலைவன் கைது

தனிப்படையை சேர்ந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி கரூரை சேர்ந்த வைரபெருமாள் (26), திருச்சியை சேர்ந்த புண்ணியமூர்த்தி (27) ஆகியோரை கைது செய்தனர். அத்துடன் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த போலீஸ் கார்த்திக் உள்பட 4 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீஸ் கார்த்திக் கோவாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கோவா விரைந்தனர். அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் பதுங்கி இருந்த போலீஸ் கார்த்திக்கை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தனர்.

மேலும்

3 பேருக்கு வலைவீச்சு
தொடர்ந்து போலீஸ் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த போலீஸ் கார்த்திக் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நெல்லையை சேர்ந்த 2 பேர், திருச்சியை சேர்ந்த ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.