• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர் மீது கட்சி தாவல் தடைச் சட்டம்: காங்கிரஸ் கோரிக்கை..,

ByS.Ariyanayagam

May 20, 2026

திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் திமுகவிற்கு சென்றதால், கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி 21 வது வார்டு மாமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திக் என்பவர் தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். கட்சித்தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ள கார்த்திக் மாமன்ற உறுப்பினர் மற்றும் மண்டல தலைவர் பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் துரை மணிகண்டன் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.