மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியை திமுகவிடம் கேட்டு காங்கிரஸ் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் தொகுதியை விட்டுக் கொடுக்க திமுக தயாராகி வருகிறதா என பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மேலூர் மதுரை மேற்கு திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி என ஐந்து தொகுதிகளில் அதிமுகவும்

மதுரை கிழக்கு மத்தி வடக்கு மற்றும் சோழவந்தான் ஆகிய நான்கு தொகுதிகளில் திமுகவும் மதுரை தெற்கு தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுகவும் வெற்றி பெற்று அதிமுக திமுக என சரிசமமாக சமப்பலத்தில் இருந்தது.

கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு அதற்கு முன்பு கடந்த பத்து ஆண்டுகளில் ஆளுங்கட்சிக்கான எதிர்மறை ஓட்டுக்களின் விளைவாக விழுந்த ஓட்டுகளை திமுக நான்கு தொகுதிகளில் வெற்றி பெற காரணமாக இருந்ததாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் கடந்த நாலரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக பல்வேறு பகுதிகளில் திமுகவுக்கு எதிர்ப்பான மனநிலையே காணப்படுகிறது.
குறிப்பாக சோழவந்தான் தொகுதியில் திமுக வெங்கடேசன் எம் எல் ஏ மீது தொகுதி மக்கள் மற்றும் நிர்வாகிகளில் ஒரு சிலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாலமேடு அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் திமுகவுக்கு ஓரளவு வாக்கு வங்கி இருக்கும் நிலையில்,

சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இன்னும் அதிமுகவிற்கான வாக்கு வங்கி குறையவில்லை என கட்சியினர் மற்றும் பொதுமக்களுடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சோழவந்தான் பகுதிக்காக கடந்த நாலரை ஆண்டுகளில் குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த ஒரு திட்டங்களையும் தொகுதி எம்எல்ஏவான வெங்கடேசன் நிறைவேற்ற வில்லை என பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக வரும் சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் திமுகவின் வெற்றி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே சோழவந்தான் பகுதிகளில் அதிகமான நிகழ்ச்சிகளில் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பதை தவிர்ப்பதாகவும் பரவலாக பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்திலும் சோழவந்தான் பேரூராட்சி வைத்தியநாதபுரம் கிராமத்திலும் பட்டியல் இன மக்களிடம் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ வுக்கு இருந்த எதிர்ப்பு இதற்கு உதாரணமாக சொல்லப்படுகிறது.
ஆகையால் தமிழக முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கிள் இடம் பெற்றுள்ள அமைச்சர் மூர்த்திக்கு சோழவந்தான் தொகுதியின் வெற்றி பெரும் சவாலாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆகையால் தொகுதியை காங்கிரசுக்கு தள்ளிவிட்டு விடலாமா என்று யோசனையில் இருப்பதாக தொகுதி நிர்வாகிகள் இடையே பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கேற்றார் போல் சில தினங்களாக காங்கிரஸ் மாநில தலைமையின் ஆசியுடன் சோழவந்தான் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் சூறாவளி சுற்றுப்ப யணம் மேற்கொண்டு தொகுதி மக்களிடையே காங்கிரஸுக்கு உள்ள செல்வாக்கு குறித்து கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனர்.
முதல் கட்டமாக கடந்த ஆறாம் தேதி அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரி கிராமத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்பி விஸ்வநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்து சென்றனர்.
அதனை தொடர்ந்து சோழவந்தான் பேருந்து நிலையப் பகுதிகளில் தொகுதி மக்களிடம் தொகுதியின் நிலவரம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்து சென்றனர்.
இந்த நிலையில் அலங்காநல்லூர் தனியார் மஹாலில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று உள்ளது.

இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது திமுக தலைமையின் ஆசியுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களது தேர்தல் பணிகளை சோழவந்தான் தொகுதியில் தொடங்கி இருக்கிறார்களா அல்லது மாவட்ட அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க தயாராகி விட்டாரா என பல்வேறு கட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சோழவந்தான் தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை விட்டுக்கொடுத்து மற்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யலாம் என திமுக தலைமை நினைத்திருக்கலாம் எனவும் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேசப்பட்டு வருகிறது.
இவை அனைத்திற்கும் காரணம் கடந்த சில ஆண்டுகளாக சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் எந்த ஒரு புதிய திட்டங்களை ஏற்படுத்தவும் மற்றும் மக்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறவும் எந்த ஒரு பணிகளையும் செய்யாததே காரணம் எனவும் பொதுமக்க இடையே பேசப்பட்டு வருகிறது.
ஆகையால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிடமிருந்து காங்கிரஸ் சோழவந்தான் தொகுதியை தட்டிப் பறிக்க வாய்ப்பு இருப்பதாகவே தொகுதி மக்கள் கூறுகின்றனர்.




