• Thu. Dec 5th, 2024

செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணித்த காங்கிரஸ்..!

Byவிஷா

Jul 28, 2022

இன்று சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை காங்கிரஸ் புறக்கணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் துவங்குகிறது. பிரதமர் மோடி இந்த விழாவை தொடங்கி வைக்கிறார் . இந்த விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது. செஸ் ஒலிம்பியாட்டை புறக்கணித்தது ஏன்? என்பதற்கு தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் புறக்கணிப்புக்கான அந்த 14 காரணங்களை முன் வைத்திருக்கிறார்.
அதில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பு அச்சுறுத்தல், முறையற்ற ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது, ஆபத்தான அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, தன்னாட்சி பெற்ற அமலாக்கத்துறை, சிபிஐ, மத்திய வருமான துறையை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்துவது, கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது, பாதுகாப்பு அச்சுறுத்தல், தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வில் பிடிவாதமாக இருப்பது, தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டமன்ற மசோதாக்களுக்கு அங்கீகாரம் அளிக்காமல் இருப்பது, தமிழக ஆளுநரை தமிழர் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு எதிராக பேச வைப்பது, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தால் ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான வகையில் அவர்களை சஸ்பெண்ட் செய்வது போன்ற மக்கள் விரோத ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு துணை போகின்றது மத்திய அரசு.
இப்படி ஜனநாயகத்திற்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளின் குரல்ளையை நசுக்கும் வகையிலும் செயல்படும் பாஜக அரசியல் கொள்கைகளை எதிர்த்து பிரதமர் மோடி துவங்கி வைக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிகழ்வுகளை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *