கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினர் கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தனர்.
கன்னியாகுமரி பேரூராட்சி மறக்குடி தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலர் டி.தாமஸ், பேரூராட்சி கவுன்சிலர் ஆனிறோஸ் ஆகியோர் தலைமையில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
காங்கிரஸ் நிர்வாகிகள் நெப்போலியன், சாதிக், சித்ரானந்த் ஆராய்ச்சி, ஜவஹர், ஜேம்ஸ், ஆனந்தி, திமுக நிர்வாகிகள் நிசார், பிரைட்டன், மெல்வின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.