ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகேயுள்ள நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் படித்து குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர்மன்றத்தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் சுற்றுவட்டார பகுதி இளைஞர்களின் நலன்கருதி கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் போட்டி தேர்விற்கு தயாரான இளைஞர்கள் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வில் 4 நபர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த v.பெருமாள் சாமி, v.அருண் காளி ராஜ், S.வைரமுத்து மற்றும் M அன்னலட்சுமி ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் வழங்கி சிறப்புரையாற்றினார். உடன் நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி மேலாளர் பாபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர் கணேசன் செய்திருந்தார்.