இந்தோனேசியாவில் SSFI இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த brothers speed skating acdamey மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் 3 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் 6 வயது பிரிவில் துஷ்யந்த் 2 வெண்கல பதக்கமும், 8 வயது பிரிவில் நேகமித்ரா 2 சில்வர் பதக்கமும், கன்யா 1 தங்கம் மற்றும் ஒரு சில்வர் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இன்று சொந்த ஊர் திரும்பிய கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களை கரூரில் அவரது உறவினர்கள் மற்றும் ஸ்கேட்டிங் பள்ளி மாணவர்கள் சார்பில் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மூன்று மாணவர்களுக்கும் தேசியக்கொடி போர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.




