• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச விரைவுஸ்கேட்டிங் மற்றும் வலைதளம் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

ByG.Suresh

Jul 15, 2024

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச விரைவுஸ்கேட்டிங் மற்றும் வலைதளம் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சிவகங்கை நகர மன்ற தலைவர் பாராட்டி கௌரவித்தார்.

இலங்கையில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான விரைவு ஸ்கேட்டிங், வலைபந்து போட்டிகளில் மாலத்தீவு இலங்கை கத்தார் நேபால் ஆகிய நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். சிவகங்கை எஸ். எல். அகடாமியை சேர்ந்த மாணவ, மாணவிகள் யோஸ்வரன் பிரனேஷ், ரமேஷ் காஞ்சி ரித்திஸ், காஞ்சி லக்சியா தீபன், கபித்வாஸ், விவான் ஆகிய மாணவ, மாணவிகள் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இவர்களை சிவகங்கை நகர மன்ற தலைவர் துரை. ஆனந்த் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் ஜெயகாந்தன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சண்முகராஜன், ராமதாஸ், கார்த்திகேயன், ஆறுமுகம் மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.