• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் பரபரப்பு…. பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

கன்னியாகுமரியில் நடைபெற்ற என்சிசி முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்குவாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் ஸ்காட் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளி மாணவர் மற்றும் கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மொத்தம் 150 பேர் கன்னியாகுமரியில் நடைபெற்ற என்சிசி முகாமில் கலந்து கொண்டு கடற்கரை ஓரம் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .அப்பொழுது கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்ந்த 43 மாணவ மாணவிகளுக்கு திடீரென்று வாந்தி ஏற்பட்டது .

உடனே அனைவரும்  கொட்டாரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர் .இத்தகவல் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்.என். தளவாய்சுந்தரம் கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து சென்று மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் கூறினார்.எதனால் மாணவ மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டது என உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் .மயக்கம் அடைந்த ஏழு மாணவர்கள் மற்றும் ஆறு மாணவிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.